உசிலம்பட்டி. ஜூலை 14: உசிலம்பட்டி அருகே திமுக மேற்கு ஒன்றிய பகுதியான மாதரை கிராமத்தில் ஓரணியில் தமிழ்நாடு சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதனை உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்பி.பழனி முன்னிலையில், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆய்வு செய்தார். மேலும் தங்களை விருப்பத்துடன் திமுகவில் இணைத்துக்கொண்ட பொதுமக்களின் வீடுகளில் ஓரணியில் தமிழ்நாடு நோட்டீஸ்களை ஓட்டினார்.
மேலும் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினார், இதில் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன், தெற்கு மாவட்ட இளைஞரணி விமல், ஜெகன், ஆதவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெயச்சந்திரன், தொகுதி அமைப்பாளர் பிரவீன்நாத், மகளிரணி அமைப்பாளர் யமுனாதேவி, உசிலம்பட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ரமேஷ், உதயா, மணிகன்டன், ஜீவா, சந்துரு, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post உசிலம்பட்டி அருகே ஓரணியில் தமிழ்நாடு சிறப்பு முகாம்: சேடபட்டி மணிமாறன் ஆய்வு appeared first on Dinakaran.
