பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைவு

காரிமங்கலம், ஜூலை 11: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் புலிக்கல் ஊராட்சியை சேர்ந்த பல்வேறு கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த அருண்குமார், அன்பரசு, பூவேந்திரன், விஜய், சபரி கிருஷ்ணன் உட்பட 20க்கும் மேற்பட்டோர் அதிமுக, தவெக ஆகிய கட்சிகளில் இருந்து விலகி, மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை மாவட்ட செயலாளர் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கோபால், கண்ண பெருமாள், முன்னாள் ஊராட்சி தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

The post பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைவு appeared first on Dinakaran.

Related Stories: