ஒட்டன்சத்திரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் விண்ணப்ப படிவம் விநியோகம்

ஒட்டன்சத்திரம், ஜூலை 10: ஒட்டன்சத்திரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி வரும் ஜூலை 15ம் தேதி தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமை தொகை, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பொதுமக்கள் மனு அளித்தால் அந்த மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

அதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் கையேடுகளை ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் உள்ள 18 வார்டுகளுக்கும் ஆணையர் ஸ்வேதா, நகர்ப்புற அமைப்பு ஆய்வாளர் தன்ராஜ், சமுதாய அமைப்பாளர் பாஸ்கர சேதுபதி மற்றும் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று வழங்கினர்.

The post ஒட்டன்சத்திரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் விண்ணப்ப படிவம் விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: