அரூர், ஜூலை 9: அரூர் அருகே உள்ள மத்தியம்பட்டி ஊராட்சி சட்டையம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.13.25 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. இதனை நேற்று அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய பொருளாளர் சாமிக்கண்ணு, அன்பழகன், பாஷா, ஏகநாதன், செந்தில்குமார், சிவாஜி, விஜயன், சிவமணி கலந்து கொண்டனர்.
The post ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.
