பக்ரீத்துக்கு வெளியாகும் உயிர் தமிழுக்கு

சென்னை: ‘ஆன்டி இண்டியன்’ என்ற படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ள படம், ‘உயிர் தமிழுக்கு’. இப்படத்தை அவரே இயக்கியுள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இதில் அமீர், சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்பிரமணியம் சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவண சக்தி நடித்துள்ளனர். பாலமுரளி வர்மன், அஜயன் பாலா வசனம் எழுதியுள்ளனர்.

தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். பா.விஜய் பாடல்கள் எழுதியுள்ளார். வரும் பக்ரீத் பண்டிகைக்கு படத்தை வெளியிட, ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post பக்ரீத்துக்கு வெளியாகும் உயிர் தமிழுக்கு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: