ஓலப்பாளையம் சுகாதார மையம் சார்பில் காந்திநகரில் வீடு தேடி சென்று மருத்துவ முகாம்

 

வேலாயுதம்பாளையம், ஜூலை 2: கரூர் மாவட்டம் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதாரத்துறை சார்பில் சுகாதார செவிலியர்கள் ,சுகாதாரத் தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் நொய்யல் அருகே காந்திநகர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வீடுகளில் இருந்த முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ,குழந்தைகள், உடல் நலம் பாதிக்கப்பட்டு, பெண்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்தத்தில் ரத்த அழுத்த அளவு குறித்து பரிசோதனை மற்றும் பிரஷர் குறித்து உடல் பரிசோதனை செய்தனர் .மேலும் அவர்களுக்கு காய்ச்சல் ,தலைவலி ,இருமல் ,தொண்டை வலி ,கால் வலி ,உடல் வலி ,இடுப்பு வலி, கை வலி ,கண் வலி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.

The post ஓலப்பாளையம் சுகாதார மையம் சார்பில் காந்திநகரில் வீடு தேடி சென்று மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: