இதனால் மன உளைச்சலில் இருந்த பாகேஷ்குமார், நேற்று அதிகாலை வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து, அவரது மகள்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த ேபாலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தாய், தந்தை இருவரும் இறந்ததால், 2 மகள்களும் ஆதரவற்று கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
The post மனைவி ஏற்கனவே இறந்த நிலையில் கடன் தொல்லை காரணமாக தொழிலாளி தற்கொலை: இரு மகள்கள் பரிதவிப்பு appeared first on Dinakaran.
