புதுடெல்லி: குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமனின் ஷினாஸ் நகரை நோக்கி பலாவ் நாட்டு வணிகக் கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது இயந்திர அறையில் பெரும் தீ ஏற்பட்டதாக பேரிடர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக, ஓமன் வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படையின் ஸ்டெல்த் போர் கப்பலான ஐஎன்எஸ் தபார் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கப்பலில் உள்ள தீயணைப்பு குழுவினர், ஹெலிகாப்டர் மற்றும் பிற உபகரணங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் நேற்று கூறுகையில், ‘‘தீப்பிடித்த கப்பலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 14 ஊழியர்கள் சிக்கி உள்ளனர். தற்போது தீயின் தீவிரம் குறைந்துள்ளது’’ என்றார்.
The post 14 இந்திய வம்சாளிகள் தவிப்பு நடுக்கடலில் தீப்பிடித்த வணிகக் கப்பல்: இந்திய கடற்படை உதவி appeared first on Dinakaran.