தேஜ் பிரதாப் யாதவிற்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு அதிகாரிக்கு கடிதம்

பாட்னா: ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் மூத்த மகனான ஜனசக்தி ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜ்பிரதாப் யாதவ். இவர் தனதுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சச்சிவாலய காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரில் , கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரேணு, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படத் தொடங்கியதாகவும், வேலை மற்றும் பிற சலுகைகளை வழங்குவதாக உறுதியளித்து தொண்டர்கள் மற்றும் பிறரிடம் இருந்து பணம் வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 14ம் தேதி ரேணு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கியதால் ரேணு சமூக ஊடக தளங்களில் என்னை திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்தார் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: