அதிருப்தியில் விலகிய கவுன்சிலர்கள் கேரள பஞ்.தலைவர் தேர்தலில் காங்.கிற்கு பாஜ ஆதரவு

திருச்சூர்: கேரளாவில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மட்டத்தூர் பஞ்சாயத்து 24 ஆண்டுகளாக இடது சாரிகளின் கோட்டையாக இருந்தது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்தில் உள்ள 24 இடங்களில் இடது ஜனநாயக முன்னணி(எல்டிஎப்) 10,ஐக்கிய ஜனநாயக முன்னணி(யுடிஎப்)8, காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி 4 இடங்களையும் கைப்பற்றியது.

2 இடங்களை சுயேச்சைகள் கைப்பற்றினர். தலைவர் பதவிக்கு சுயேச்சையாக வெற்றி பெற்ற காங்கிரஸ் அதிருப்தியாளர் அவுசேப்பை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு செய்திருந்தது. ஆனால் அவுசேப் இடது சாரி கூட்டணியில் சேர்ந்தார். இதனால், கோபமடைந்த காங்கிரசின் 8 கவுன்சிலர்கள் தங்களை சுயேச்சைகளாக அறிவித்தனர்.

பாஜ சார்பில் வெற்றி பெற்ற 4 கவுன்சிலர்கள் இவர்களுக்கு ஆதரவளிப்பதாகக கூறினர். இதையடுத்து காங்கிரஸ் அதிருப்தியாளராக வெற்றி பெற்ற டெஸ்ஸி ஜோஸ் கள்ளரக்கல் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார். அவருக்கு பாஜ உறுப்பினர்கள் ஆதரவளித்ததால் 12 உறுப்பினர்களின் ஆதரவுடன் டெஸ்ஸி ஜோஸ் தலைவரானார்.

Related Stories: