சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சம்சுதீன்(33) என்பவரை கைது செய்துள்ளோம். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். 2 குழந்தைகள் உள்ளனர். அசாம் மாநிலத்தில் அவரின் குடும்பம் உள்ளது. பெங்களூருவில் காவலாளி பணி மேற்கொண்டு இந்த பகுதியில் வசித்துள்ளார். இதற்கிடையே ஆஷா(40) என்ற பெண்ணுக்கும் சும்சுதீனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவனை இழந்த ஆஷா அவரின் 2 குழந்தைகளுடன் சம்சுதீனுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்ட போது ஆஷாவை சம்சுதீன் கொலை செய்து, சடலத்தை சாக்குப் பையில் கட்டி பைக்கில் கொண்டு வந்து குப்பை லாரியில் போட்டதை ஒப்புக்கொண்டுள்ளார், என்றார்.
The post பெங்களூரு அருகே கள்ளக்காதலியை கொன்று சடலத்தை குப்பை லாரியில் வீசிய அசாம் வாலிபர் கைது appeared first on Dinakaran.
