அதேபோல் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு செல்வகணபதி எம்பி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மனுத்தாக்கல் தாக்கல் செய்தனர். பகல் 12 மணி வரை வி.பி ராமலிங்கத்தை தவிர்த்து, வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் வி.பி. ராமலிங்கம் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து தேர்தல் அதிகாரி அகிலன் கூறுகையில், வி.பி ராமலிங்கம் தாக்கல் செய்த வேட்பு மனு சரியான பரிந்துரைகளுடன் இருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கான முறையான அறிவிப்பு நாளை (இன்று) வெளியாகும், என்றார். இதற்கிடையே இன்று மதியம் 12 மணிக்கு மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் தேசிய பொது செயலாளர் தருண்சோக் முன்னிலையில் வி.பி. ராமலிங்கம் தலைவர் பதவியை ஏற்கவுள்ளார். 2021ம் ஆண்டு பாஜவில் இணைந்த வி.பி ராமலிங்கத்துக்கு, நியமன எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து தற்போது, மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post புதுவை பாஜ தலைவராக வி.பி. ராமலிங்கம் தேர்வு: இன்று பதவியேற்பு appeared first on Dinakaran.
