புதுவை நிர்வாகத்திலிருந்து 30ம் தேதி 5 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு: பிற மாநிலங்களுக்கு இடமாற்றம்

புதுச்சேரி, ஜூன் 24: புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது புதிய பணியில் சேருவதற்காக வருகிற 30ம் தேதி புதுச்சேரி நிர்வாகத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
\
மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவுப்படி புதுச்சேரியில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளாக வேளாண்துறை செயலர் நெடுஞ்செழியன் டெல்லிக்கும், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோமசேகர் அப்பாராவ் கோட்டாரு லட்ச தீவுகளுக்கும், கல்வித்துறை செயலர் பிரியதர்ஷினி அருணாச்சல பிரதேசத்துக்கும், தொழிலாளர் துறை செயலர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி மிசோரமுக்கும், தொழில்துறை செயலர் ருத்ர கவுடு லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகளும் அவர்களது புதிய பணியில் சேருவதற்காக வருகிற 30ம் தேதி பிற்பகல் முதல் புதுச்சேரி நிர்வாகத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். கவர்னர் உத்தரவின் பேரில் இதற்கான ஆணையை தலைமை செயலர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளார்.

The post புதுவை நிர்வாகத்திலிருந்து 30ம் தேதி 5 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு: பிற மாநிலங்களுக்கு இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: