இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது:
விற்பனை சான்றிதழ் பதிவு செய்யும்போது, அதற்கு பதிவு கட்டணம் 4 சதவீதம் வசூலிக்கப்பட்டது. அதை 2 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து விற்பனை சான்றுக்கு பதிவு கட்டணத்தை குறைத்து பதிவுத்துறை தலைவர் அரசுக்கு பரிந்துரை வழங்கினார். இதனை கவனமாக பரிசீலித்த அரசு பதிவுத்துறை தலைவரின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, விற்பனை சான்றிதழ்களுக்கான பதிவு கட்டணம் 4 சதவீத்தில் இருந்து, 2 சதவீதமாக குறைத்து வசூலிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
The post விற்பனை சான்றிதழ்களுக்கு பதிவு கட்டணம் 2 சதவீதமாக குறைப்பு: அரசு உத்தரவு appeared first on Dinakaran.
