வரும் 14ம் தேதி ரேஷன் கடை குறைதீர் கூட்டம்

 

தஞ்சாவூர், ஜூன் 13: ரேஷன் கடை குறைதீர் கூட்டம் வரும் 14ம் தேதி நடப்பதாக கலெக்டர் தெரிவித்தார். பொதுவிநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அதனை களைவதற்கும், மக்களின் குறைகளைக்கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட சென்னை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 2025 மாதத்திற்கான பொதுவிநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். வரும் 14ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்கள் அளித்து பயன்பெற வேண்டுமென கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post வரும் 14ம் தேதி ரேஷன் கடை குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: