சென்னை ரயில்வே கோட்டத்தில் 9 புறநகர் ரயில் சேவைகளின் நேரம் நாளை முதல் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை, டிச.31: சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் 9 புறநகர் ரயில்களின் நேரம் நாளை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்ேவ வெளியிட்ட அறிக்கை:
திருத்தணி- மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும் ரயில் எண் (43504, 43514) அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு காலை 5.55 மணிக்கும், பிற்பகல் 2.55 மணிக்கும், அரக்கோணம்- மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும் ரயில் எண் (66008) காலை 9.50 மணிக்கும் சென்றடையும். இதேபோல், சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் ரயில் எண் (42611) இரவு 8.05 மணிக்கும், சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும் ரயில் எண் (66032) இரவு 9.05 மணிக்கும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும் ரயில் எண் (42040) இரவு 9.40 மணிக்கும் சென்றடையும். மேலும் செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் ரயில் எண் (40552, 40556, 40570) மாலை 6.05, 6.30, இரவு 10.20 மணிக்கு வந்தடையும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: