தேவகோட்டை, டிச.31: தேவகோட்டை கருதாவூரணி சபரி சாஸ்தா 29ம் ஆண்டு பஜனை மடத்தில் கார்த்திகை 1ம் தேதி முதல் பூஜை தொடங்கப்பட்டு தினந்தோறும் மாலையில் வண்ண மலர்கள், பழங்கள், சாக்லேட், கயிலை மலை போன்ற பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் மற்றும் பஜனைகள் நடைபெற்று வந்தது. நேற்று மண்டல பூஜை நிறைவில் ஐயப்பன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குருசாமி கயிலை பொன்ராஜ் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் பஜனை செய்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் மதிய அன்னதானம் வழங்கப்பட்டது.
