மருத்துவ வாகனம் வழங்கல்

சிவகங்கை,டிச.31: கிராம மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு ரூ.1 கோடி மதிப்பில் நடமாடும் மருத்துவ வாகனம் வழங்கப்பட்டது. இல்லம் தேடி மருத்துவர் என்ற அடிப்படையில் செயல்படும் இந்த வாகனம் தினம் ஒரு கிராமம் சென்று இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளது. இலவச மருந்துகள் வழங்கப்படும். இதில் ஒரு மருத்துவர், ஒரு மருந்தாளுநர், ஒரு செவிலியர் இருப்பர். இது போல் தமிழ் நாட்டிற்கு 10 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட வாகன பயணத்தை கலெக்டர் பொற்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் சுந்தரராமன் முன்னிலை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மீனாட்சி, தாசில்தார் விஜயகுமார், மருத்துவர் பானுப்பிரியா, அலுவலர் அருண்கிருஷ்ணன், நிர்வாக அலுவலர் விக்னேஸ்வரி, பேரிடர் மேலாண்மை பாலமுருகன், செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலர் அனந்தகிருஷ்ணன், துணை தலைவர் முத்துப்பாண்டியன், உறுப்பினர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: