பொன்னேரி பஜாரில் சாலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை

பொன்னேரி, டிச. 31: பொன்னேரி பஜார் சாலையில் இருபக்கமும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். பொன்னேரியில் உள்ள ஹரிஹரன் பஜார் வீதி, புதிய பேருந்து நிலையம் சாலையில் ஓட்டல்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், வங்கிகள், மருந்து கடைகள் என 200க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன 80 அடி அகலம் உள்ள சாலை 30 அடிகளாக சுருங்கி வியாபாரிகள் ஆக்கிரப்பு செய்துள்ளனர். சாலையின் இரு பக்கமும் சாலை ஓர கடைகளால் தினமும் போக்குவரத்து பாதிப்பு உள்ளது ஆக்கிரமங்களை அகற்றி சீர் செய்ய வேண்டும் என பொன்னேரியில் செயல்படும் திருவள்ளூர் மாவட்ட மக்கள் மேம்பாட்டு சங்கம் நகராட்சி சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல தரப்பினர் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று பொன்னேரி நகராட்சி துறை அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காவல்துறை துணையுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

Related Stories: