சேவுகப் பெருமாள் அய்யனார் கோயில் பூப்பல்லக்கு விழா ேகாலாகலம்

சிங்கம்புணரி, ஜூன் 12: சிங்கம்புணரியில் பூரணை புஷ்கலா தேவியாருடன் உடனான சேவுகப் பெருமாள் அய்யனார் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் மண்டக படி நிகழ்ச்சியாக நடைபெறும் இத்திருவிழாவில் 5ம் நாள் திருவிழாவாக திருக்கல்யாண விழாவும், 6ம் நாள் திருவிழாவாக சமணர்களை கழுவேற்றும் களுவன் திருவிழாவும், 8ம் நாள் புரவி எடுப்பு நிகழ்ச்சியும், 9ம் திருவிழாவாக திருத்தேரோட்ட விழாவும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 10ம் நாள் பூப்பல்லக்கு திருவிழா நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லாக்கில் இரவு பூரணை புஷ்கலை தேவியாருடன் சேவகப்பெருமாள் அய்யனார் எழுந்தருளினார். தொடர்ந்து இரண்டு மணிக்கு பூப்பல்லக்கு மாடுகள் கூட்டிய சப்பரத்தில் வைக்கப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக கோயிலை வலம் வந்து மீண்டும் கோயிலை அடைந்தது.

The post சேவுகப் பெருமாள் அய்யனார் கோயில் பூப்பல்லக்கு விழா ேகாலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: