அவிநாசியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

அவிநாசி, ஜன. 8: அவிநாசி உட்கோட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 37-வது சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முதல் கால்நடை மருத்துவமனை சென்று மீண்டும் அவிநாசி புதிய பேருந்து நிலையம் வரை வந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்வில் அவிநாசி உதவிக்கோட்டப் பொறியாளர் செங்குட்டுவன், உதவிப்பொறியாளர் தரணிதரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வனிதா, காவல் துறையினர், போக்குவரத்து காவல் துறையினர், சாலை ஆய்வாளர் மற்றும் சாலைப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சாலை விதிகளை மதிப்போம், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர், படியில் பயணம் நொடியில் மரணம், வாகனம் ஓட்டும்போது கைபேசி உபயோகிக்காதீர் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

Related Stories: