காரிமங்கலம், ஜன.8: காரிமங்கலம் பேரூராட்சி சேர்மன் மனோகரன் கூறியுள்ளதாவது: காரிமங்கலம் பேரூராட்சியில், பொதுமக்கள் நலன் கருதி ரூ.1.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகனமேடை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, தற்போது மாசுக் கட்டுப்பாட்டு துறை சார்பிலும் அனுமதி பெறப்பட்டுள்ளது. எரிவாயு தகனமேடை சேவை அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக பண்ணந்தூர் அரிமா சங்கம் மற்றும் பிசிஆர் மெட்ரிக் பள்ளி சார்பில் எரிவாயு தகனமேடை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான முடிவு எட்டப்பட்டு எரிவாயு தகனமேடை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
