‘என் ஓட்டு என் உரிமை’ செல்பி விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமகிரிப்பேட்டை, ஜன. 8: நாமகிரிப்பேட்டை பேரூராட்சி சார்பில், ‘என் ஓட்டு என் உரிமை’ எனும் தலைப்பில் செல்பி மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நாமகிரிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம் செல்பி எடுத்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும், வாக்குரிமை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையும், கடமையும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பேரூராட்சி அலுவலக வளாகம், பஸ் நிலையம், வார சந்தை மற்றும் முக்கிய பொது இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டன. பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ‘என் ஓட்டு என் உரிமை’ என்ற வாசகத்துடன் செல்பி எடுத்து கொண்டு, சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் சேரன், துணை தலைவர் அன்பழகன், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு, புதிய வாக்காளர் பதிவு, திருத்தம் போன்ற தகவல்களும் பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டன.

Related Stories: