கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

போச்சம்பள்ளி, ஜன. 8: போச்சம்பள்ளி வட்டம், காட்டகரம் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக, கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு வீடுகளில் 2 மற்றும் 3 பசுகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆடுகளை விவசாயிகள் வளர்த்து வருகிறார்கள். தற்போது போச்சம்பள்ளி தாலுகாவில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதால் கால்நடைகளுக்கு நோய் பரவும் நிலையில், கால்நடை பராமரிப்பு துறையில் சார்பில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடை மருத்துவ உதவியாளர் சந்தோஷ் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க சிகிச்சை அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, 50க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்றனர். முகாமில் 50க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்களின் உரிமையாளர்கள், தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்கள் கால்நடைகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டு பயனடையுமாறு கேட்டு கொண்டார்.

Related Stories: