வீட்டுமனை பட்டா கேட்டு தூய்மை காவலர்கள் போராட்டம்

விருதுநகர், ஜன. 8: தமிழ்நாடு துப்புரவு தூய்மை காவலர் மற்றும் பொது தொழிற்சங்கம் சார்பில் நத்தம் புறம்போக்கில் குடியிருந்து வரும் அனைவருக்கும் பட்டா வழங்க கோரி விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் லட்சுமி தலைமை வகித்தார். இதில் அரசு நத்தம் புறம்போக்கில் குடியிருந்து வரக்கூடிய அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

 

 

Related Stories: