மேலும் தடி, இரும்பு கம்பிகளால் திருமண வீட்டாரை பயங்கரமாக தாக்கி உள்ளனர். இதில் ராகவேந்திர கவுதமின் உறவினர்களான அஜய் குமார், மனன் காந்த் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து ரஸ்ரா காவல்நிலையத்தில் ராகவேந்திர கவுதம் அளித்த புகாரில், “மல்லா டோலி பகுதியை சேர்ந்த அமன் சாஹ்னி, தீபக் சாஹ்னி, ராகுல், அகிலேஷ் உள்ளிட்டோர் அடங்கிய 20 பேர் கும்பல் வௌ்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் திருமண மண்டபத்துக்குள் நுழைந்து, திருமண வீட்டாரை சாதி ரீதியாக அவதூறாக பேசினர். தொடர்ந்து அங்கிருந்தவர்களை கடுமையாக தாக்கினர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
The post மண்டபத்தில் திருமணம் செய்வதா? தலித் குடும்பம் மீது பயங்கர தாக்குதல்: உ.பியில் அவலம் appeared first on Dinakaran.
