மதுரை, மே 23: தேனி சாலையில் நடைபெறும் பைபாஸ் சாலை திட்டத்தில், கட்டிடங்களை இடிக்கும் பணிகள் மீண்டும் துவங்கி உள்ளன. மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில், எச்எம்எஸ் காலனி முதல் நாகமலை புதுக்கோட்டை வரையிலான 3.5 கி.மீ தூரத்திற்கு ரூ.260 கோடியில் பைபாஸ் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்திற்காக 400க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது வரை மாடக்குளம் கண்மாய் குறுக்கிடும் பகுதியில சுற்றுச்சுவர் அமைப்பது மற்றும் 2 கி.மீ தூரத்திற்கு மண் சாலை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. இதனுடன், திண்டுக்கல் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் விதமாக மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி 42 தூண்கள், 980 மீட்டர் நீளம், இருபுறமும் தலா 10.5 மீட்டர் அகலத்துடன் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் 40 சதவீதம் வரை முடிந்துள்ளன.
The post கட்டிடங்களை அகற்றும் பணி மீண்டும் துவக்கம் விரைவாக உருவாகும் மேம்பாலம் appeared first on Dinakaran.
