நாகர்கோவிலில் அனுமதி பெறாத பேனர்கள் அகற்றம் மாநகராட்சி நடவடிக்கை

நாகர்கோவில், மே 22: நாகர்கோவில் மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் மற்றும் மின் கம்பங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. மின்கம்பங்கள் மற்றும் மரங்களின் கிளைகளிலும், ஆணி அடித்து வருகின்றனர். இதனால், மரங்களுக்கு ஆபத்து என இயற்கை ஆர்வலர்கள் புகார் கூறி வந்தனர். மேலும், சாலையோரங்களில் அனுமதியின்றி ைவக்கப்படும் பேனர்களால், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவுப்படி மாநகராட்சி நகர அமைப்பு அதிகாரிகள் அனுமதி பெறாத விளம்பர பேனர்கள் மற்றும் பிளக்ஸ் ஆகியவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பீச் ரோடு, இருளப்பபுரம், வடிவீஸ்வரம் மற்றும் வடசேரி ஆகிய பகுதிகளில் 50 விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. மாநகராட்சி முழுவதும் இப்பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

The post நாகர்கோவிலில் அனுமதி பெறாத பேனர்கள் அகற்றம் மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: