ராமேஸ்வரம், மே 17: ராமேஸ்வரம் வடகாடு கிராமம் தரவைப் பகுதி நீர்த்தேக்கம் மற்றும் பசுமை நிறைந்து காணப்படும் பகுதியாக உள்ளது. இதனால் இப்பகுதியில் ஏராளமான நாட்டு குதிரைகள் உள்ளன. நேற்று அப்பகுதியில் சுற்றித் திரிந்த நாட்டு குதிரை ஒன்று, 15 அடி ஆழ கினற்றில் தவறி விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து குதிரையை மீட்டு பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.
The post கிணற்றில் விழுந்த குதிரை மீட்பு appeared first on Dinakaran.
