கோவை, ஜன. 7: கோவையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லாரா பிரேம் தேவ் ஏற்பாட்டில் விளையாட்டு விழா நடந்தது. இதில், கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, கேரம் மற்றும் சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
பரிசுகளை கோவை மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, மாநில மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் டாக்டர் மகேந்திரன், மாநில துணைச் செயலாளர்கள் வி.ஜி.கோகுல், தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.தனபால், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கோவை அருண், மணிகண்டன், மசூது, பகுதி கழகப் பொறுப்பாளர் இலா.தேவசீலன்,
மாவட்ட அமைப்பாளர்கள் அர்ஜுனன், அன்னம்மாள், கனிமொழி, பாபு நாகசாமி, சுரேஷ்குமார், வட்டக்கழக செயலாளர் நவீன் பாலமுருகன், ஜெபமாலை தாஸ், கவுன்சிலர் முனியம்மாள் மற்றும் ஆர்.ஆர்.மோகன், பிரின்ஸ், வைரமணி, கோபால், துரை மோகன் மற்றும் மாவட்ட பகுதி கழக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
