வணிக ரீதியிலான இயந்திரம் வாங்க பெண்களுக்கு 50 சதவீதம் மானியம்

ஈரோடு, ஜன. 7: ஈரோடு மாவட்டத்தில், சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பெண்களின் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி நடப்பு 2025- 2026ம் நிதியாண்டுக்காக வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது அதன் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 12ம் தேதிக்குள், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தின் 6வது தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0424- 2261405 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

 

Related Stories: