நாகர்கோவில், மே 17: வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்புபொதுத் தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவன் தருண்சாஹர் 492 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். 490 மதிப்பெண் பெற்று தன்ஷிகா இரண்டாம் இடத்தையும், 489 மதிப்பெண் பெற்று மனிஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 82 மாணவ, மாணவிகளில் 480 மதிப்பெண்களுக்கு மேல் 14 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 26 மாணவர்களும் 400 மதிப்பெண்களுக்கு மேல் 40 மாணவர்களும் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 10 மாணவர்களும், கணித பாடத்தில் 4 மாணவர்களும் சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மாணவரும் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் கிருஷ்ணசுவாமி, துணைத்தாளாளர் சுனி, பள்ளி இயக்குநர் தருண்சுரத், முதல்வர் லிஜோமோள் ஜேக்கப், அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவஹர் மற்றும் ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் பாராட்டினர்.
The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அருணாச்சலா பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.
