திருவரங்குளம் ஊராட்சியில் சூறைக்காற்றால் 41.4 ெஹக்டேர் பரப்பளவில் வாழை மரங்கள் சேதம்: அமைச்சர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல்

புதுக்கோட்டை,மே16: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், பள்ளத்திவிடுதி கிராமத்தில், நேற்றையதினம் வீசிய சூறைக்காற்றால் பாதிப்படைந்துள்ள வாழை மரங்களை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது;
தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பேரிடர் மழைக் காலங்களில் விவசாயிகள் விளைவித்த பயிர் வகைகள் பாதிப்பிற்குள்ளாகும் போது, அதற்கான உரிய நிவாரணம் வழங்கிடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளத்திவிடுதி கிராமத்தில், நேற்றையதினம் வீசிய சூறைக்காற்றால் பாதிப்படைந்துள்ள வாழை மரங்களை நேற்றுநேரில் பார்வையிடப்பட்டது.

அதனடிப்படையில், திருவரங்குளம் வட்டாரத்தில் 14ம் தேதி அன்று காற்றுடன் கூடிய கனமழை பெய்ததில், கொத்தக்கோட்டை, தெட்சிணாபுரம், பள்ளத்திவிடுதி, கோவிலூர், வேங்கிடகுளம், குப்பக்குடி, வெண்ணாவல்குடி ஆகிய வருவாய் கிராமங்களில் 41.4 ஹெக்ேடர் பரப்பளவில் வாழை பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்த 62 விவசாயிகளும், 1.20 ஹெக்ேடர் பரப்பளவில் மரவள்ளி பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்த 2 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், பாதிப்படைந்த விவசாயிகளின் வயல்களை வருவாய் துறையுடன் இணைந்து பயிர் சேத கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வினை, பள்ளத்திவிடுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்ற விவசாயின் வயலினை நேற்று நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விடுதலின்றி பயிர்சேதம் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள் மூலம் விவசாயிகள் பாதிப்படையும் பட்சத்தில், அதற்கான உரிய நிவாரணம் வழங்கிடும் வகையில் தொடர்புடைய அரசு அலுவலர்கள் விரைந்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், இணை இயக்குநர் (வேளாண்மை) சங்கரலட்சுமி, தோட்டக்கலை துணை இயக்குநர்.ரேகா, திருவரங்குளம் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, திருவரங்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர், வட்டார அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

The post திருவரங்குளம் ஊராட்சியில் சூறைக்காற்றால் 41.4 ெஹக்டேர் பரப்பளவில் வாழை மரங்கள் சேதம்: அமைச்சர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் appeared first on Dinakaran.

Related Stories: