ராமேஸ்வரம் கோயிலில் நாளை படியளத்தல் நிகழ்வு

ராமேஸ்வரம், ஜன.9:அஷ்டமி பூப்பிரதஷிணத்தை முன்னிட்டு நாளை மறுநாள் காலையில் சுவாமி படியளத்தல் ராமேஸ்வரம் கோயிலில் நடையடைக்கப்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் நாளை மறுநாள் மார்கழி மாத அஷ்டமி பூப்பிரதஷிணம் படியளத்தல் நிகழ்வு நடைபெறும். அன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். பின்னர் சுவாமி அம்பாள் சன்னதிகளில் கால பூஜைகள் நடைபெற்று 7 மணிக்கு அஷ்டமி சப்பரம் பஞ்சமூர்திகள் எழுந்தருளல் நடைபெறும். ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்ச மூர்த்திகள் சகிதம் எழுந்தருளி நகரில் வலம் வந்து அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளத்தல் நிகழ்ச்சி நடைபெற்று வீதியுலா முடிந்து மதியம் கோயிலுக்கு திரும்பியபின் கோயில் நடை திறந்து சுவாமி அம்பாள் சன்னதியில் உச்சிக்கால பூஜை நடைபெறும். இதையடுத்து அன்று காலை 7 மணிக்கு முதல் பகல் 12 மணிவரை கோயில் நடை அடைக்கப்படும். இதே நேரத்தில் பக்தர்கள் 22 புனித நீராடல் நிறுத்தப்படும். மீண்டும் கோயில் நடை 12 மணிக்கு மேல் திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜைக்கு பிறகு பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதி என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: