சாத்தூரில் ஜமாபந்தி துவக்கம்

சாத்தூர், மே 16: சாத்தூர் வட்டத்தில் வருவாய் தீர்வாய ஜமாபந்தி முகாம் நேற்று தொடங்கியது.
சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று வட்டாட்சியர் ராஜாமணி தலைமையில் மாலை 3 மணிக்கு ஜமாபந்தி தொடங்கியது. முகாமில் ஜமாபந்தி அலுவலர் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார். முதல் நாளான நேற்று நென்மேனி குறுவட்டத்திற்கு உட்பட்ட நல்லமநாயக்கன்பட்டி, குண்டலகுத்தூர், பாப்பாகுடி, கோசுகுண்டு, ஆத்திபட்டி, என்.மேட்டுப்பட்டி, சிறுக்குளம், மேலமடை, நென்மேனி, எம்.நாகலாபுரம், சிந்துவம்பட்டி உள்ளிட்ட 14 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், கணக்கு திருத்தம், நில அளவை, மின் இணைப்பு சான்று, சொத்து உரிமைச் சான்று, பட்டா ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர். கிராம கணக்குகளும் சரிபார்க்கப்பட்டு ஆய்வு செய்யபட்டது. வரும் 22ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுகிறது.

The post சாத்தூரில் ஜமாபந்தி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: