சிறுவர் பூங்காவை ஆக்கிரமித்த கருவேல மரங்களை அகற்றவேண்டும்: ராமேஸ்வரம் மக்கள் வலியுறுத்தல்

ராமேஸ்வரம், மே 14:சிறுவர் பூங்காவை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களால், இரவு நேரங்களில் மர்ம நபர்களின் கூடாரமாக மாறியுள்ளது. ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் அரசு விருந்தினர் மாளிகை முன்பு உள்ள சிறுவர் பூங்கா முறையான பராமரிப்பு இன்றி விளையாட்டு உபகரணங்கள் முழுமையாக சேதமடைந்து சிறுவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கிடக்கிறது. பூங்கா உள்ளே பேவர் பிளாக் நடைபாதை உள்ளதால் காலை நேரங்களில் உள்ளூர் மக்கள் நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தி வந்தனர். தற்போது முட்புதர்கள் சூழ்ந்து கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால் சிறுவர் பூங்கா எவ்வித பயன்பாடும் இன்றி மர்ம நபர்களின் கூடாரமாக மாறியுள்ளது.

முட்புதர்களும், கருவேல மரங்களும் உயரமாக வளர்ந்து மறைவாக இருப்பதால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துவதற்காக பூங்காவை பயன்படுத்துகின்றனர். மது அருந்தும் மர்ம நபர்கள் சிலர் பூங்காவின் உள்ளே உள்ள ஸ்டீல் கைப்பிடி கம்பிகளை உடைத்து எடுத்துச் செல்கின்றனர். மேலும் மதுபாட்டில்களை உடைத்து விட்டு செல்வதால் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நகராட்சி நிர்வாகம் புதர்கள் மற்றும் கருவேல மரங்களை அகற்றி சிறுவர் பூங்காவை சுத்தம் செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சிறுவர் பூங்காவை ஆக்கிரமித்த கருவேல மரங்களை அகற்றவேண்டும்: ராமேஸ்வரம் மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: