பெண்கள் பணியாற்றும் நிறுவனங்களில் உள்ளக குழு அமைக்காவிட்டால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை

மதுரை, மே 14: பெண்கள் பணியாற்றும் நிறுவனங்களில் உள்ளக குழு அமைக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

மதுரை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை: பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டப்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10 மற்றும் 10க்கும் மேற்பட்ட ஆண், பெண் இரு பாலரும் பணியாற்றும் பணியாளர்கள் உள்ள அனைத்து பணியிடங்களிலும் உள்ளக குழு (Internal Committee) கட்டாயம் அமைக்க வேண்டும். இக்குழுவின் விபரத்தை www.tnswd-poshicc.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கூட்டுறவு துறை சார்ந்த சங்கம் மற்றும் நிறுவனங்கள், கிராம ஊராட்சிகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வங்கிகள், காவல் நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைகடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், பயிற்சி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், மேலும் 10 மற்றும் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிலும் உள்ளக குழு அமைத்து அதன் விபரங்களை www.tnswd-poshicc.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இக்குழுவில் 50 சதவீதம் பெண்கள் இடம்பெற வேண்டும். குழுவில் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் தொண்டு நிறுவனம், சமூக செயல்பாட்டாளர் மற்றும் சட்ட வல்லுனர்கள், சமூகபணி கல்வியாளர்களைக் கொண்டு உள்ளக குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். உள்ளக குழு அமைக்காத அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள் மீது பணி இடங்களில் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டப்படி ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கபடும் என எச்சரித்துள்ளார்.

The post பெண்கள் பணியாற்றும் நிறுவனங்களில் உள்ளக குழு அமைக்காவிட்டால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: