நாசரேத், மே 13: நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பேராசிரியை ரெஜினா எலிசபெத் ஜெபம் செய்தார்.கணினி துறை தலைவர் ஜெமில்டாவரவேற்றார். சிறப்பு அழைப்பாளரை பேராசிரியை எமிலி எஸ்தர்ராணி அறிமுகம் செய்தார். தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியை சுமதி பங்கேற்று பேசினார். பேராசிரியை பிரேமா அறிக்கையை வாசித்தார். கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியை ஷீலா நிறைவு ஜெபம் செய்தார். பேராசிரியர் எட்வின் டாஸ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஜாண் சந்தோஷம், முதல்வர், கணினி துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள் சத்யராஜ், பமீலா ரேச்சல், சுகன்யா, சாரோன் ஜெனிஸ், பிரின்ஸ்சஸ் பாலா மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
The post நாசரேத் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு appeared first on Dinakaran.
