எங்களுக்கும் எங்களது நாட்டு மக்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கொள்கைகளை நிலைநிறுத்தவதற்கான எங்கள் உறுதிபாட்டின் மூலமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவை தெரிவித்துள்ளன. இந்திய பயணிகள் விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்றும், இந்த இடங்களுக்கு எந்த அத்தியாவசியமற்ற பயணத்தையும் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இதன் மூலமாக அந்தந்த நாடுகளின் சுற்றுலா வருமானம் வெகுவாக குறையும்.
* ஜம்முவுக்கு பேருந்து சேவை நிறுத்தம்
இந்தியா-பாகிஸ்தான் பதற்றமான நிலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாபின் ஹோஷியார்பூரில் இருந்து பஞ்சாப் சாலை போக்குவரத்து கழக பேருந்துகள் எதுவும் நேற்று ஜம்முவுக்கு இயக்கப்படவில்லை. பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
The post பாகிஸ்தானுக்கு ஆதரவு: துருக்கி, அஜர்பைஜான் பயண சலுகைகள் நிறுத்தம் appeared first on Dinakaran.
