தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை விதித்தது பாக். நீதிமன்றம்..!!

பாகிஸ்தான்: தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இம்ரான் கான் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் சிறையில் உள்ளார். 2018-22ல் பிரதமராக இருந்தபோது கருவூலத்தில் இருந்த பரிசுப் பொருள்களை வாங்கியது, விற்றது தொடர்பான வழக்கில் சிறை சென்றார். அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு ஏற்கனவே 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: