இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, கடந்த 7ம் தேதி திடீரென அறிவித்தார். ஏற்கனவே, டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்தாண்டு அவர் அறிவித்தார். அதே சமயம், ஒரு நாள் போட்டிகளில் மட்டும் ஆடப் போவதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில், ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றதை அடுத்து, இந்திய டெஸ்ட் அணிக்கு இளம் வீரர் ஒருவரை பிசிசிஐ தேர்ந்தெடுக்கும் என கூறப்பட்டது. சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட பல வீரர்களின் பெயர்கள் அலசப்பட்டன.
இவர்களில், ஷ்ரேயாஸ் ஐயர் சமீப போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பும்ராவும், முதுகில் ஏற்பட்ட காயத்தில் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்.
இந்த சூழ்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் பெயர் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன. ஒரு நாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஏற்கனவே செயல்பட்டு வரும் அவர், ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ரோகித் ஓய்வை அடுத்து இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக கில் தேர்வு?; பிசிசிஐ தீவிர பரிசீலனை appeared first on Dinakaran.
