சில்லி பாய்ன்ட்…

* இந்தியா திரும்பினார் பேட்மின்டன் சிந்து
புதுடெல்லி: இஸ்ரேல் – ஈரான் இடையில் போர் வெடித்ததால், வளைகுடா நாடுகளில் வான்வெளி மூடப்பட்டு விமானங்கள் பறக்க முடியாமல் போனது. இந்த சமயத்தில் துபாய் சென்று அங்கிருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்து வரும் பேட்மின்டன் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டிருந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தார். இரண்டு நாள் போராட்டத்துக்கு பின், விமானம் மூலம் தற்போது அவர் இந்தியா திரும்பி உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் நேற்று சிந்து வெளியிட்ட பதிவில், தான் இந்தியா திரும்பி விட்டதாகவும், பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

* இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மாபெரும் கவுரவம்
மாட்ரிட்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை மகளிர் ஒரு நாள் செமிபைனலில் ஆஸியையும், பைனலில் தென் ஆப்ரிக்காவையும் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆண்டின் சிறந்த லாரஸ் உலக விளையாட்டு அணி விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ள அணிகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இது, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சாதனைகளுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது.

Related Stories: