சென்னை: நடிகர் விஜய் அரசியலில் தாக்குப் பிடிப்பாரா என்பதை நேரம் வரும்போது பேசுகிறேன் என்று நடிகை சிம்ரன் தெரிவித்தார். நடிகை சிம்ரன் லண்டனிலிருந்து டெல்லி வழியாக நேற்று மதியம் விமான மூலம், சென்னை வந்தார். அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: டூரிஸ்ட் பேமிலி படம் வெற்றி அடைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. குட் பேட் அக்லி படமும் நன்றாக வந்து உள்ளதால், நல்ல பேமிலி உருவாகியுள்ளது. எனது 30 ஆண்டு திரைத்துறை வாழ்க்கையில், டூரிஸ்ட் பேமிலி சிறந்த படம். இப்போது ஆடியன்ஸ் ஓப்பன் மைண்டாக இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில், பெண் கதாநாயகிகள், படங்களில் நல்ல கதை அம்சம் கொண்டதாக இருந்தால், பெண்களே திரைப்படங்களை பண்ணலாம்.
ஆனால் நல்ல கதை அம்சம் முக்கியம். இந்தியா -பாகிஸ்தான் இடையே, போர் பதற்றமான சூழல் உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் மனித நேயம் தான் ஜெயிக்கும். அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய்க்கு ஆல் தி பெஸ்ட், குட் லக், வாழ்த்துகள். இவர், அரசியலில் தாக்குப் பிடிப்பாரா என சரியான நேரம் வரும்போது பதில் கூறுகிறேன். 90ம் ஆண்டுகளில் திரைப்படங்களில் கதாநாயகிகளாக இருந்தவர்கள், மீண்டும் சினிமா துறைக்கு வருவது நல்லது தானே? பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துகள்.
The post நடிகர் விஜய் அரசியலில் தாக்குப்பிடிப்பாரா?; நடிகை சிம்ரன் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.
