மதுரை: மதுரையில் சித்திரைத் திருவிழாவை ஒட்டி வைகை அணையில் இருந்து இன்றுமுதல் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவத்துக்காக இன்று முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்றுமுதல் 12ம் தேதி வரை 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.