ஊட்டி, மே 8: ஊட்டி நகர திமுக சார்பில் திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் தெருமுனை பிரச்சாரம் இன்று நடக்கிறது. ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊடி நகர திமுக சார்பில் 8ம் தேதி இன்று வியாழக்கிழமை நாடு போற்றும் நான்காண்டு, இது தொடரட்டும் பல்லாண்டு, சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஊட்டி நகரம் முழுவதும் நடைபெற உள்ளது. இதில் தலைமைக்கழக பேச்சாளர் திருப்பூர் கூத்தரசன் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நகரச் செயலாளர் ஜார்ஜ் கூறியுள்ளார்.
The post ஊட்டி நகர திமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் appeared first on Dinakaran.
