சாயல்குடி,மே 7: முதுகுளத்தூர் அருகே மேலத்தூவல் கிராமத்தில் பழமையான ஆலம்பக்கோட்டை முனியப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கிராம மக்கள் சார்பாக 25 ஆண்டுகளுக்கு முன்பு நேர்த்திக் கடனாக விடப்பட்ட முனியம்மாள் என்ற பசுமாடு நேற்று முன்தினம் இறந்து போனது.
கிராம மக்கள் இறந்த மாட்டை மஞ்சள் தண்ணீரை கொண்டு குளிப்பாட்டி சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து பட்டு வேட்டி, பட்டுபுடவை அணிவித்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மேளதாளத்துடன் டிராக்டரில் கொண்டு சென்று ஆலம்பக்கோட்டை முனியசாமி கோயில் வளாகத்தில் அடக்கம் செய்தனர்.
The post முதுகுளத்தூர் அருகே கோயில் மாட்டிற்கு மரியாதை appeared first on Dinakaran.
