நுந்தளா, காந்திபேட்டையில் காட்டு மாடுகள் உலா

 

ஊட்டி, மே 7: நுந்தளா, காந்திபேட்டை பகுதியில் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டி – மஞ்சூர் சாலையில் லவ்டேல் அருகில் காந்திபேட்டை, நுந்தளா உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகள் அடர்ந்த வனப்பகுதிக்கு அருகில் உள்ளது. காந்திப்பேட்டையை ஒட்டி உள்ள வனப்பகுதியில் கரடி, காட்டு மாடு, குரங்கு, காட்டு பன்றி போன்ற வனவிலங்குகள் அதிகளவு வசித்து வருகின்றன.

வனவிலங்குகள் அவ்வப்போது சாலையில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் சமீப காலமாக நுந்தளா, காந்திபேட்டை சுற்று வட்டார பகுதிகளில் காட்டுமாடுகள் சாலைகளில் உலா வருகின்றன. காட்டுமாடுகள் அடிக்கடி நடமாட்டத்தால் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் தேயிலை தோட்டகளிலும் உலா வருவதால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் அவதியடைந்துள்ளனர்.

 

The post நுந்தளா, காந்திபேட்டையில் காட்டு மாடுகள் உலா appeared first on Dinakaran.

Related Stories: