வடகாடு முத்துமாரியம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு விழா

 

புதுக்கோட்டை, மே 7: புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு முத்துமாரியம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடைபெற்றது. வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் 27-ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் சித்திரைத் திருவிழா தொடங்கியது. தினமும் மண்டகப்படி தாரர்கள் சார்பில் அம்மன் வீதியுலா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. முக்கியத் திருவிழாவான தேரோட்டத் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

சித்திரைத் திருவிழாவின் நிறைவு விழாவான மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடைபெற்றது. அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளல் செய்யப்பட்டது. பின்னர், மஞ்சள் நீர் பக்தர்களுக்கு தெளித்தபடி அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 4 வாகனங்களில் இருந்தும் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.வடகாட்டில் இரு பிரிவினரிடையேயான மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவுக்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வடகாடு முத்துமாரியம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: