காஷ்மீர் தாக்குதலைக் கண்டித்து புதுக்கோட்டையில் பாஜக ஆர்ப்பாட்டம்

 

புதுக்கோட்டை, மே 6: காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த கொடூர தீவிரவாத தாக்குதலை கண்டித்தும், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதில் தமிழக அரசு மும்மரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் புதுக்கோட்டை மேற்கு பாஜக சார்பில், மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை சேர்ந்தவர்கள் மேற்பட்டோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணாவை சந்தித்து மனு அளித்தனர்.

The post காஷ்மீர் தாக்குதலைக் கண்டித்து புதுக்கோட்டையில் பாஜக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: