100 நாள் திட்ட பணியில் தேனீக்கள் கொட்டியதில் 40 பெண்கள் படுகாயம்

திருபுவனை, மே 6: மதகடிப்பட்டு அடுத்த கலித்தீர்த்தால்குப்பம் டிஜிபி நகர் அருகில் தொகுப்பு வீடுகள் அடங்கிய குடியிருப்பு பகுதி உள்ளது. இதன் அருகே உள்ள பாலக்குட்டையில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தூர்வாரும் பணியை செய்து கொண்டிருந்தனர். அதன் அருகே இலவம்பஞ்சு மரத்தில் பெரிய தேன் கூடு ஒன்று இருந்துள்ளது. அப்போது திடீரென தேனீக்கள் பறந்து வந்து தூர்வாரும் பணியில் இருந்த 30 பெண்களை கொட்டியது. தேனீக்கள் கொட்டியதில் பணியில் இருந்த பொதுமக்கள் வலி தாங்க முடியாமல் கதறி அழுதனர். வீக்கம் வலி அதிகமானதால் அப்பகுதியில் இருந்த 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருபுவனை அரசு துணை சுகாதார நிலையத்திற்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கலிதீர்த்தால்குப்பம் மணக்குள விநாயகர் மருத்துவமனை, அரியூரில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். தேனீக்கள் கொட்டியதால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை திருபுவனை தொகுதி எம்எல்ஏ அங்காளன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

The post 100 நாள் திட்ட பணியில் தேனீக்கள் கொட்டியதில் 40 பெண்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: